உலகத்தரத்தில் ரெயில் நிலையம் - தமிழகத்தில் இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் முக்கிய நகரங்களில் உள்ள ரெயில் நிலையங்களின் எதிர்கால வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அம்ருத் பாரத் ரெயில் நிலையம் என்றத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் ரெயில் நிலையங்களின் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக பராமரிப்பது, இலவச வைபை வசதி, காத்திருப்பு அறை, மின்தூக்கி, மின்படிக்கட்டு, உள்ளூர் தயாரிப்பை முன்னிலைப்படுத்தும் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடை அமைப்பது உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைக்கப்பட உள்ளன. 

இதில் முதல்கட்டமாக கடந்த ஆண்டில் 508 ரெயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக நாடு முழுவதும் 554 ரெயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேம்படுத்துவதற்கான பணிகளை பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

அதாவது, சென்னை கடற்கைரை, பூங்கா, அம்பத்தூர், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, ஈரோடு, மொரப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி, திருச்செந்தூர், மயிலாடுதுறை, கும்பகோணம், விருத்தாச்சலம், தர்மபுரி, ஒசூர் உள்ளிட்ட 34 ரெயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை மோடி தொடங்கி வைக்கிறார். இதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் நான்கு ரெயில்வே மேம்பாலத்தையும், 114 சுரங்க ரெயில் பாதையையும் திறந்து வைக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi lay the foundation stone at railway stations in tamilnadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->