மதுரை : தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்ட பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி.! - Seithipunal
Seithipunal


மதுரை : தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்ட பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி.!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் அடுத்த டி. கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் கணேசன்-கருப்பாயி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் இளைய மகள் அன்னலட்சுமி பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்வில் வினாக்கள் கடினமாக கேட்டதனால் மதிப்பெண் குறைந்து தேர்வில் தோல்வி அடைந்து விடுவேன் என்று அடிக்கடி தனது பெற்றோரிடம் தெரிவித்து வந்துள்ளார். இதைக்கேட்ட அன்னலட்சுமியின் பெற்றோர் அவரை சமாதானம் செய்து வந்துள்ளனர். 

இருப்பினும் அன்னலட்சுமி தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அன்னலட்சுமி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பொதுத் தேர்வின் முடிவு வெளியாகும் முன்னரே பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

plus 2 student sucide in madurai for exam result fear


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->