சென்னை : 12ஆம் வகுப்பு மாணவியை 3 மாத கர்ப்பமாக்கிய பிளஸ்-1 மாணவன்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் 12ஆம் வகுப்பு மாணவியை பிளஸ்-1 மாணவன் கர்ப்பமாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு வகுப்பு படித்து வருகிறார். இவர் சில நாட்களாக சோர்வாக உடல்நிலை பாதிக்கப்பட்டு காணப்பட்டுள்ளார். இதனால் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மாணவி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து மாணவியிடம் விசாரித்தனர். இதில் பக்கத்து வீட்டை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவனுடன், மாணவி நெருக்கமாக நெருங்கி பழகி வந்ததும், இதனால் கர்ப்பமானதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பெற்றோர் இது குறித்து செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

plus 1 boy made a 12th class 3 months pregnant in chennai


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->