பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மீது காவல் நிலையத்தில் புகார்.! - Seithipunal
Seithipunal


பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மீது காவல் நிலையத்தில் புகார்.!

இந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில், முறையற்ற ஏற்பாடுகள் காரணமாக பார்வையாளர்கள் சங்கடங்களை அனுபவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. 

அதுமட்டுமல்லாமல், டிக்கெட் வாங்கிவிட்டு நிகழ்ச்சியை பார்க்க முடியாதவர்களுக்கான பணமும் திருப்பிக் கொடுக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் மீது அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளனர்.

அதில், "கடந்த 2018ம் ஆண்டு அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாட்டில் ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது மாநாடு நடத்த சரியான இடம் மற்றும் அனுமதி கிடைக்காததால் ரஹ்மான் நிகழ்ச்சி நடைபெறாமல் போனது.

இந்த நிகழ்ச்சிக்காக ரஹ்மானுக்கு ரூ.29.50 லட்சம் வழங்கப்பட்டது. இந்தப் பணத்தைத் திரும்பப் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் முன்பணத்தை பெற்றுக்கொண்ட ரஹ்மான் திருப்பி தரவில்லை" என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pettition against music director ar rahman


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->