கோயம்பேடு : பேருந்தில் இருக்கை பிடிக்க முயன்று 30.5 சவரன் நகையை தொலைத்த நபர்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 31) இவர் தங்க நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவர் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 5ம் தேதி ஏழுமலையிடம் தங்க நகைகளை கொடுத்து லேசர் கட்டிங் செய்ய சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார். சென்னை வந்த ஏழுமலை நகை பணிகளை முடித்துவிட்டு 30.5 சவரன் நகையுடன் திருவண்ணாமலை செல்ல கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றுள்ளார்.

அங்கு செய்யாறு செல்லும் தனியார் பேருந்து கூட்டமாக இருந்ததால் இடம் பிடிக்க தங்க நகைகள் இருந்த பையை ஜன்னல் வழியாக பேருந்து இருக்கையில் போட்டுள்ளார். அதன் பிறகு உள்ளே சென்று பார்த்த போது நகை பையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையம் த்தில் புகார் அளித்தனர் இதனை அடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நீலாங்கரை அண்ணா நகர் 2வது தெருவை சேர்ந்த சந்திரசேகர் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நகை மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

person lost 30.5 savaran gold while trying to get a seat in the bus


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->