பெரியார் பல்கலையில் தொடரும் சர்ச்சை.. மேலுமொரு குற்றச்சாட்டில் சிக்கிய முக்கிய புள்ளி.!! - Seithipunal
Seithipunal


சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கும் ஜெகநாதன் மற்றும் பதிவாளர் தங்கவேல், இணை பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருக்கும் ராம் கணேஷ் ஆகியோர் இணைந்து கல்வி கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் தொழிற்சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் அளித்த புகாரின் பேரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியார் பல்கலைக்கழக துணைவேந்த ஜெகநாதன் கைது செய்தனர்.

சொந்த ஜாமனின் விடுவிக்கப்பட்ட ஜெகநாதன் மீண்டும் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி வருகிறார். சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்ட துணைவேந்தர் இளங்கோவனை நேரில் சந்தித்த தமிழக ஆளுநர் ரவி நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என தைரியம் கொடுத்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளியை ஆளுநர் ரவி நேரடியாக சந்தித்து பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அங்கு பதிவாளராக பணியாற்றி வந்த தங்கவேல் என்பவர் தற்போது தலைமறைவாக இருந்து வருகிறார். தலை மறைவாக இருக்கும் தங்கவேல் மேலும் ஒரு நிறுவனத்தில் இயக்குனராக இருந்து வருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பல்கலைக்கழகத்தில் அரசு சம்பவத்தில் பணியாற்றக்கூடிய தங்கவேல் அப்டெக்கான் போரம் என்ற தனியார் நிறுவனத்தில் இயக்குனராக இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. தலைமறைவாக இருக்கும் தங்கவேலை உடனடியாக பணியிடம் நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Periyar University register thangavelu was director of one more company


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->