திமுக பிரமுகரின் பெயரைச்சொல்லி அட்டகாசம்.. வித்தவுட் வந்த பூசாரி, வம்பிழுத்து நடுரோட்டில் அடம்..! - Seithipunal
Seithipunal


தனியார் பேருந்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து, நடத்துனரின் கண்டிப்பை கண்டித்து பேருந்தை மறித்த பூசாரி திமுக கட்சி பிரமுகரின் பெயரைரகளை செய்ததால் நடுரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது. 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அயனாவரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் பூசாரியாக இருந்து வரும் நிலையில், பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டில் 500 ரூபாய்க்கு பூ வாங்கி விட்டு, தனியார் பேருந்தில் ஊருக்கு புறப்பட்டுள்ளார். 

இதன்போது, பேருந்தில் இருந்த கூட்டத்தை பயன்படுத்தி, டிக்கெட் எடுக்காமல் இருந்த முருகன் நடத்துனரிடம் சிக்கியதும் தன்னிடம் பணம் இல்லை, ஊருக்கு சென்று தருகிறேன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில், திருச்சி புறநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லால்குடி அருகே பேருந்து நின்றதும், பூசாரியை நடத்துனர் வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து இறங்கி விட்டுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த பூசாரி நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டடுள்ளார். ஒரு கட்டத்தில் சாலையில் அமர்ந்து பேருந்தை செல்ல விடாமல் தடுத்த நிலையில், இந்த விஷயத்தை கவனித்த லால்குடி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பழனியம்மாள் விசாரணை செய்ய முயற்சித்துள்ளார். 

இதன்போது காவலர் முன்னிலையிலேயே நடத்துனரை அவதூறாக பேசி திட்டி தீர்த்த நிலையில், பேருந்து நடத்துனர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் பழனியம்மாள் நடத்துனரிடம் பணத்தை கொடுத்து, பேருந்தில் அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். 

பேருந்தில் ஏறிய பூசாரி மீண்டும் தகராறு செய்யவே, சக பயணிகள் அவரை இறக்கி விட கோரி காவல் துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். பேருந்தில் இருந்து இறங்கியதும் தன்னை எங்கு வேண்டுமென்றாலும் கூட்டிச் செல்லுங்கள் என்றும், திமுக பிரமுகர் கே.என் நேருவின் உறவினருக்கு போன் போடுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து ரூ. 50 பணத்தைக் கொடுத்த காவல் துறையினர், வேறு பேருந்தில் ஏறி செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட பூசாரி முருகன், பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனரை ஒரு கை பார்க்காமல் விட மாட்டான் என்று ரகளை செய்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Perambalur Trichy Lalgudi Private bus man fight 17 Feb 2021


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->