குடிநீரும் இல்லை.. சாலையும் இல்லை.. இந்த ஊரே வேண்டாம் என்று வெளியேறும் கிராம மக்கள் - தேவகோட்டை அருகே பரிதாபம்..!! - Seithipunal
Seithipunal


தேவக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் சரியான சாலை வசதி மற்றும் குடிநீர் இல்லாததால் , கிராம மக்கள் குடும்பம், குடும்பமாக ஊரை காலி செய்து வருகின்றனர். 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே என். மணக்குடி என்ற ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியைச் சேர்ந்த கிராமம் தான் பூத வயல் கிராமம். இங்குள்ள தெருவில் குடிநீர்க் குழாய்கள் இருந்தும் அதில் பல ஆண்டுகளாக தண்ணீர் வருவதில்லை. 

இதையடுத்து அமைக்கப்பட்ட தொட்டிகளுடன் கூடிய 3 ஆள்துளைக் கிணறுகளும் பழுதாகியும், தொட்டிகள் சேதமடைந்த நிலையிலும் உள்ளன. மேலும் இக்கிராமத்திற்குச் செல்லும் 3 கி. மீ தூரமுள்ள சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப் படாமல் உள்ளது. மேலும் கண்மாயில் இருந்து சரியும் மண் இந்த சாலையை மூடி முற்றிலும் மண் சாலையாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக மழைக் காலங்களில் இந்த சாலையில் பயணிக்க மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 

மேலும் கண்மாய் மடைகள் முழுவதும் சேதமடைந்துள்ளதாலும், கண்மாயை தூர் வாராததாலும் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. மேலும் மழைக் காலத்தில் இரண்டு மூன்று நாட்கள் வரை கூட மின்சாரம் துண்டிக்கப் பட்டு விடும். இதனால் கிராமத்தை விட்டு பெரும்பாலான குடும்பங்கள் வெளியேறி விட்டன. 


தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதால் மாதம் ரூ. 1000 வரை தண்ணீருக்கே செலவாகிறது. சாலையில் மண் சரிந்துள்ளதால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸோ, ஆட்டோவோ கூட கிராமத்திற்குள் வர முடியாது. இதனால் 30 குடும்பங்கள் இருந்த கிராமத்தில் தற்போது 10 குடும்பங்களே உள்ளனர். விரைவில் அவர்களும் இங்கிருந்து வெளியேறி விடுவார்கள் என்று கிராம மக்கள் சிலர் தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Peoples Leaving The Village Near Devakottai Saying No Drinking Water No Roads


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->