அண்ணாவின் 54வது நினைவு தினத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி..!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 54ஆவது நினைவு தினம் இன்று..!!

முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் 54வது நினைவு நாள் இன்று தமிழக முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதற்காக திமுக மற்றும் அதிமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னை வாலாஜா சாலை முதல் காமராஜர் சாலை அண்ணா நினைவிடம் வரை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 7 மணிக்கு அமைதி பேரணி தொடங்கியது.

இந்த அமைதி பேரணியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு மற்றும் திமுகவைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் திமுக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த பேரணியானது வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகில் புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நினைவிடத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளார். இந்த பேரணியில் திரளான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Peace rally led by CM MKStalin on Anna 54th death anniversary


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->