அலப்பறையோடு பசும்பொன்னிற்குச் செல்லும் இளைஞர்கள்.! நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை.!
pasumpon muthuraamalinga devar jayanthi young boys difficult travel
இன்று நடைபெறும் தேவர் குருபூஜைக்கு நான்கு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் வாகனத்தின் மேற்கூரை மீது நின்று கொண்டும், தொங்கிக் கொண்டும் மொபைலில் செல்பி எடுத்துக் கொண்டும்மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் கலந்துக் கொள்வதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இந்த விழாவிற்கு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை வழியாக மதுரை - ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மற்றும் தனியார் வாகனங்களில் பசும்பொன்னிற்குச் சென்ற இளைஞர்கள் வாகனங்களின் மேற்கூரை மீது ஏறிக்கொண்டும் சன்னல் படிகளில் தொங்கிக் கொண்டும் சத்தம் எழுப்பிக் கொண்டும், மொபைல் போன்களின் மூலம் வீடியோ எடுத்துக் கொண்டும் கத்திக்கொண்டே ஆபத்தான பயணங்கள் மேற்கொண்டனர்.
மேலும், போக்குவரத்து விதிகளை மீறி சென்ற வாகனங்கள் மீதும் இளைஞர்கள் மீதும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
pasumpon muthuraamalinga devar jayanthi young boys difficult travel