பள்ளிக்கரணை சதுப்புநிலம்:பள்ளிக்கரணை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் மறுபடியும் தடை நீட்டிப்பு...!
Pallikaranai Mangrove High Court extends ban Pallikaranai issue again
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் அமைக்க தனியார் நிறுவனத்திற்கு அரசு வழங்கிய அனுமதியை சவால் செய்து வக்கீல் பிரஸ்னவ் தாக்கல் செய்த வழக்கு, மீண்டும் புதிய திருப்பத்தை கண்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே இடைக்காலத் தடை விதித்திருந்த சென்னை உயர்நீதிமன்றம், நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜராகிய அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன்,“நீதிமன்ற உத்தரவின்படி செயற்கைக்கோள் தரவுகளின் உதவியுடன் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் துல்லியமான பரப்பளவை கணக்கிடும் பணி 99% முடிவடைந்துவிட்டது” என விளக்கமளித்தார்.
இதற்கிடையில், தமிழ்நாடு சதுப்பு நில ஆணையத்துக்கு சார்பாக மூத்த வழக்கறிஞர் பி. வில்சன்,“நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கில், பள்ளிக்கரணை சதுப்பு நில எல்லைக் குறியீட்டு அறிக்கை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.நீதிபதிகள், வழக்கை வருகிற 11-ந்தேதிக்கு தள்ளி வைத்து, மனுதாரர் தரப்பில் வக்கீல் தமிழ்செல்வன் கோரியபடி,ஏற்கனவே இருந்த இடைக்காலத் தடையையும் நீட்டித்து உத்தரவிட்டனர்.
English Summary
Pallikaranai Mangrove High Court extends ban Pallikaranai issue again