தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை...! - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
Paid Leave Private Sector Employees Too Election Commission Issues Strict Order
தமிழக அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம்,தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 23-ம் தேதியன்று, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.இந்தத் தேர்தலில் சுமார் 5.69 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்நிலையில், அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஏப்ரல் 23 அன்று விடுமுறை விடப்பட வேண்டும்.
தொழிலாளர்கள் பணியாற்றும் தொகுதியில் தேர்தல் நடைபெறாவிட்டாலும், அவர்கள் வாக்காளர்களாக இருக்கும் தொகுதியில் வாக்களிக்க ஏதுவாக இந்த விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
தினக்கூலி தொழிலாளர்களாக இருந்தாலும், அவர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Paid Leave Private Sector Employees Too Election Commission Issues Strict Order