யார் முதலமைச்சர் வேட்பாளர்.? மீண்டும் இரு குழுவான அதிமுக; பரபரப்பு தகவல் வெளியானது..!  - Seithipunal
Seithipunal


இன்று காலை தொடங்கிய அதிமுக செயற்குழு கூட்டமானது மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.முன்னதாகவே அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கிய ஒரு சில மணி நேரத்திலேயே 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக தேர்தலை ஒட்டி கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் தேர்தல் கூட்டணி தொடர்பான விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது. இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் கூட இந்த செயற்க்குழுக் கூட்டத்திலேயே முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்ய வேண்டும் என்று சில அமைச்சர்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், தம்பிதுரை உள்ளிட்டோர் இந்த செயற்குழுக் கூட்டத்திலேயே 2021 சட்டமன்ற தேர்தலை முன்வைத்து முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்களாம்.

அதே நேரத்தில் ஓ.பி .எஸ் தரப்பினர் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைத்து விட்டு அதன் பின்னர் முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்யலாம் என்ற யோசனையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த 18ம் தேதி நடைபெற்ற உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் கூட பதினொரு பேர் கொண்ட வழிகாட்டு ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் தரப்பினர் வலியுறுத்தினார்கள்.

இ.பி.எஸ், ஓ.பி.எஸ் அணிகள் இணைப்புக்கு முன்னதாக பல்வேறு நிபந்தனைகளுடன் தான் அணிகள் இணைப்புக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் அணியின் இணைப்பின் போது முன்வைக்கப்பட்ட 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைக்க வேண்டும் என்ற நிபந்தனை இதுநாள் வரைக்கும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, பதினோரு பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து பின்பு முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வது தான் சரியாக இருக்கும் என ஓபிஎஸ் தரப்பினரும் பிடிவாதமாக கூறி வருவதாக  கூறப்படுகிறது.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அந்த பதினொரு பேர் கொண்ட குழுவை அமைப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அதிமுகவில் தொடர்ந்து குழப்பம் நீடித்து பரபரப்பு நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS EPS ADMK Party Meeting 28 September 2020


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->