ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்! அரசியல் நோக்கமா? - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலுக்கு தேசிய கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதுபோல் மாநில கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

தமிழகத்தை பொறுத்தவரை நான்கு முனை போட்டி ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் பரபரப்புக்கு மத்தியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார். 

முன்னதாக நேற்று இரவு ராஜபாளையம் சென்று அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். 

இவருக்கு தொண்டர்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர். பின்னர் கார் மூலம் மேற்கு தொடர்ச்சி மலை, செண்பகத் தோப்பு அடிவார பகுதியில் உள்ள அவரது குலதெய்வ கோவிலுக்கு சென்று சுமார் 2 மணி நேரம் சிறப்பு வழிபாடு செய்தார். 

இது குறித்து அவரது கட்சி நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்வதற்காக மட்டுமே குலதெய்வ கோவிலுக்கு வந்துள்ளார். இதில் எந்த ஒரு அரசியல் நோக்கமும் கிடையாது என தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS darshan Srivilliputhur Andal temple


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->