85 மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர், கோவையில் வினோதம் !! - Seithipunal
Seithipunal


கோயமுத்தூர் மாவட்டம் கந்தசாமி நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 85 மாணவர்களின் கல்வியை ஒரே ஒரு ஆசிரியர் பாடம் நடத்தி வருகிறார்.

பள்ளியில் மாணவர் மற்றும் ஆசிரியர் விகிதத்தில் விதிமுறைப்படி போதிய ஆசிரியர்களை நியமிக்க சம்பந்த பட்ட அதிகாரிகள் கடமையை தவறிவிட்டதாக மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் கூறியுள்ளனர்.

"வருகின்ற 2024-25ஆம் கல்வியாண்டில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதற்கும் , பள்ளி நிர்வாகத்தை பார்த்துக்கொள்ளவும்  ஒரே ஒரு பெண் ஆசிரியர் மட்டுமே தலைமையாசிரியர் பொறுப்பில் இருப்பார்" என்று ஒரு பெற்றோர் கூறினார்.

"கடந்த கல்வியாண்டில், தற்போது உள்ள ஆசிரியருடன் ஒரு தலைமையாசிரியரும் இங்கே இருந்தார், ஆனால் பிறகு வேறு பள்ளிக்கு இடம் மாறினார். ஒரு ஆசிரியரால் 85 குழந்தைகளுக்கு கல்வியின் அடிப்படைகளை திறமையாகக் கற்பிக்க முடியாது” என்று பெற்றோர்கள் வேதனை தெரிவித்தனர்.

தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட 30:1 மாணவர் மற்றும் ஆசிரியர் விகிதத்தின்படி பள்ளிக்கு ஒரு தலைமையாசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்று அந்த பெற்றோர்கள் சுட்டிக்காட்டினர்.

இதை பற்றி பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் பேசுகையில், “மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க கூடுதலாக இரண்டு ஆசிரியர்களையாவது நியமிக்க வேண்டும் என்று கடந்த 3 மாதங்களில் மாநகராட்சிக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். நியமனங்கள் இன்னும் செய்யப்படவில்லை” என்று கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

only one teacher for 85 students


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->