மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் திறப்பு: கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை மற்றும் ஒகேனக்கல்லில் குளிக்க தடை..!
One lakh cubic feet of water released from Mettur dam
மேட்டூர் அணையில் இருந்து நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக, வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து, கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்தது. இதன் காரணமாக கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி கரையோர கரையோர மக்களுக்கு கர்நாடக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கேஆர்எஸ் அணையில் இருந்து இன்று இரவுக்குள் 1.2 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
நடப்பாண்டில் மேட்டூர் அணையில் இருந்து 04-வது முறையாக நேற்று முன்தினம் ( ஜூலை 25) அணை நிரம்பியது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், தற்போதைய நிலையில் 68 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது. ஆனால், தற்போது நீர் வரத்து வினாடிக்கு 01 லட்சம் கன அடியாக அதிகரித்தது. இதனையடுத்து அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படவுள்ளது.
இதனையடுத்து காவிரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்ளுக்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவுக்கு நீர் வரத்து 88 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இது குறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரை முறை சார்ந் குளங்கள்,ஏரிகள் மற்றும் சர்பங்கா போன்ற திட்டங்களுக்கு திருப்பிவிட்டு, நீரை முடிந்த அளவு சேமிக்க நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணையானது கடந்த நான்கு பாசன ஆண்டுகளில் 2021- 2022, 2022-2023, மற்றும் 2024- 2025 ல் முழு கொள்ளவை எட்டி உள்ளது. கடந்த 2024- 2025ம் ஆண்டில் ஜூலை 30, ஆக.,12 மற்றும் டிச.,31 ஆகி யநாட்களில் முழு கொள்ளவை எட்டியது.
இந்த ஆண்டில் ஜூன் 29, ஜூலை 05, 20 மற்றும் 25 ஆகிய தேதிகளில் முழுகொள்ளவை எட்டியது. வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. பொது மக்கள் வெள்ள அபாய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும். என்று அவருடைய அறிக்கையில் கூறியுள்ளார்.
English Summary
One lakh cubic feet of water released from Mettur dam