திருப்பூர் || ஆம்னி பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்.!
One killed in omni bus accident
திருப்பூர் மாவட்டத்தில் ஆம்னி பேருந்து மீது வாகன மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நெல்லையில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்று இன்று திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது குண்டடம் 4-ல் ரோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஆம்னி பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இதில் ஆம்னி பேருந்து முன் பக்கம் சேதம் அடைந்த நிலையில், பேருந்தில் பயணம் செய்த முதலிப்பாளையத்தை சேர்ந்த சிவசுப்பிரமணி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
One killed in omni bus accident