ரேஷன் கடைகளில் வரப்போகும் புதிய மாற்றம்.! இனி பாமாயிலுக்கு பதில் என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில், மொத்தம் 34,793 ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைவருக்கும் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது, சர்க்கரை 1 கிலோ, ரூ. 13.50, கோதுமை ரூ.7.50, மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 13.60 – 14.20, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு கிலோ ரூ. 30.00, பாமாயில் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ளதாவது:- "தமிழக வேளாண்மை பட்ஜெட்டில் விவசாயிகளின் பல கோரிக்கைகள் இடம்பெறாமல் உள்ளது. தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பத்து ஆண்டுகளாக பாதித்த தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காத நிலையில் உள்ளனர். 

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலுக்கு பதில் ரேஷன் கடைகளில் தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர். அதனால், வருகின்ற ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் தாக்களில் இந்த அறிவிப்பு வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

oil not provide in ration shops in tamilnadu


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->