ஆளாளுக்கு வறாங்க.. அடிச்சு நகர்த்திட்டு போறாங்க.. நாங்க என்ன செய்ய முடியும்..? கதறும் விவசாயிகள்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஆத்தூர்பிள்ளையூரில் கல்குளத்தில் அத்துமீறி கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஆத்தூர்பிள்ளையூரில் கல்குளம் உள்ளது. இக்குளத்திற்கு அருகே உள்ள தொப்பையசாமி மலைப்பகுதியில் மழை பெய்யும்பொழுது மழைநீர் ஓடைகள் வழியாக கல்குளத்திற்கு தண்ணீர் வரும்.

இதனால் குளத்தைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்நிலையில் தற்போது சிலர் கட்டிட கழிவுகளை லாரிகள், டிராக்டர்களில் கொண்டு வந்து குளத்தின் உள்ளே கொட்டி செல்கின்றனர்.

இதனை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய தலைவர் சவடமுத்து தலைமையில் விவசாயிகள் தடுத்தபோது, கட்டிட கழிவுகளை கொண்டு வந்தவர்கள் விவசாயிகளை மிரட்டுகிறார்கள்.

தொடர்ந்து கட்டிட கழிவுகளை கொட்டுவதால் மழை காலங்களில் குளத்திற்கு வரும் மழைநீர் தேங்கி நிற்க வாய்ப்பு இல்லை என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆத்தூர்பிள்ளையூர் கல்குளத்தில் கொட்டப்பட்ட கட்டிடக் கழிவுகளை அகற்றவும் மேலும் மீண்டும் கட்டிட கழிவுகளை கொட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OFFICIALS MISUSED WATER BODY


கருத்துக் கணிப்பு

திமுக காங்கிரஸ் கருத்து யுத்தம்..! சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி
கருத்துக் கணிப்பு

திமுக காங்கிரஸ் கருத்து யுத்தம்..! சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி
Seithipunal