ஜூஸ் குடித்த சிறுமி உயிரிழப்பு - ஆலைகளில் அதிரடி காட்டும் அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள, செய்யாறு அருகே பத்து ரூபாய் குளிர்பானம் குடித்த ஐந்து வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, குளிர்பானம் விற்ற கடை மற்றும் ஆலையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதன் படி, கனிகிலுப்பை கிராமத்தில் குளிர்பானம் விற்பனை செய்த பெட்டிக் கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையின் முடிவில், குளிர்பான பாட்டிலை ஆய்வுக்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

இதன் பின்னர், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அடுத்த ஏகே சமுத்திரத்தில் உள்ள டெய்லி என்ற 10 ரூபாய் குளிர்பானம் தயாரிக்கும் ஆலையில், நாமக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி முருகன் தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் முடிவில், ராசிபுரத்தில் உள்ள டெய்லி ஆலை குளிர்பானத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

officers raide in cooldrinks factory in thiruvannamalai


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->