திருப்பத்தூர் || தற்கொலை செய்து கொண்ட செவிலியர்.. காவல்துறையினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


செவிலியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், செவ்வத்தூர் கிராமத்தில் வசிப்பவர் கணபதி.  இவரது மகள் துர்கா அங்குள்ள மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வருகிறார்.  இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார்.  வீட்டிற்கு வந்த அவரது பெற்றோற் மகள் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nurse Committed Suicide


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->