பயண ஆவணங்கள் இல்லை...பாஸ்போர்ட் இல்லை...! இலங்கைப் பெண்ணைச் சந்திக்க கடல் வழியாகத் தப்பிய சிறுவன் அதிரடி கைது...! - Seithipunal
Seithipunal


சமூக வலைதளம் மூலம் இலங்கையைச் சேர்ந்த சிறுமியுடன் ஏற்பட்ட நட்பைத் தொடர்ந்து, அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சட்டவிரோதமாக படகில் இலங்கை சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு சென்ற சிறுவனை தலைமன்னார் காவலர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்பகுதியில் இருந்து எந்தவித பயண ஆவணங்களும் இல்லாமல் படகில் சிறுவன் இலங்கைக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. படகில் பயணம் செய்வதற்கான கட்டணத்துக்கு பணம் இல்லாத நிலையில், தனது தங்கச் சங்கிலியை படகோட்டியிடம் கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சென்ற சிறுவன், தலைமன்னார் பகுதியில் இருந்தபோது காவலர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த காவலர்கள், சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் சிறுவன் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிறுவனின் வயதை கருத்தில் கொண்ட நீதிமன்றம், அவரை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்க உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, சமூக வலைதளம் மூலம் சிறுவனுக்கு அறிமுகமான இலங்கை சிறுமி யார்? இருவருக்கும் இடையே எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது? சிறுவன் தனியாகவே இலங்கைக்கு புறப்பட்டாரா? அல்லது அவருக்கு வேறு யாரேனும் உதவி செய்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தலைமன்னார் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சிறுவன் கடல் வழியாக இலங்கைக்கு செல்வதற்கு உதவியவர்கள் யாரேனும் உள்ளனரா என்பதையும் காவலர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சிறுவன் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No travel documents no passport boy who escaped by sea meet Sri Lankan woman arrested


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->