வீடு, வாகன கடனில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
No changes in home and vehicle loans Reserve Bank announcement
ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என்பதால் வீடு, வாகன கடனும் அதே அளவிலேயே தொடரும் என ரிசர்வ் வங்கி சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 5.5 சதவீதமாக தொடரும். இதன் விளைவாக, STF விகிதம் 5.25 சதவீத ஆகவும், MSF விகிதம் மற்றும் வங்கி விகிதம் 5.75 சதவீத ஆகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளார் .மேலும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி தொடர பணவியல் கொள்கைக் குழு முடிவு செய்தது. இதன் விளைவாக இந்த ஆண்டுக்கான சராசரி பணவீக்கம் திருத்தப்பட்டு, ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்ட 3.7சதவீத ஆகவும், ஆகஸ்ட் மாதத்தில் 3.1 சதவீத ஆகவும் இருந்து 2.6 சதவீத ஆக இருந்து 2.6 சதவீத ஆகக் குறைக்கப்பட்டுள்ளதுஎன்றும் அவர் தெரிவித்துள்ளார் .
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படாததால் வீடு, வாகனக் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.பணவீக்கம், சர்வதேச நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் வருமான வரி அடுக்குகள் மற்றும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி மறுசீரமைப்பு என எல்லாவற்றையும் சேர்த்தே ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளார் .
ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்குக் கடன் வழங்கும் வட்டி விகிதம் தான் ரெப்போ விகிதமாகும். 6.5%ஆக இருந்த ரெப்போ விகிதம், இந்தாண்டு தொடக்கத்தில் 5.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டால் நமது கடன் வட்டி குறையும். அதாவது நாம் செலுத்தும் இஎம்ஐ குறையும். அதேநேரம் நமது சேமிப்புக் கணக்குகளில் கிடைக்கும் வட்டியும் குறையும். மறுபுறம் ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால் நாம் செலுத்தும் கடன் இஎம்ஐ தொகையும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
English Summary
No changes in home and vehicle loans Reserve Bank announcement