தமிழக அரசின் செய்திக்கு ஒரு Fact Check | உண்மை என்ன? அம்பலப்படுத்தும் பசுமைத் தாயகம் இர. அருள்! - Seithipunal
Seithipunal


மக்களுக்கு உண்மையான தெளிவான செய்தியை தருவது தமிழக அரசின் கடமை, அதிலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் சார்ந்த, தமிழகத்தின் நலன் சார்ந்த விவகாரத்தில் கூடுதல் கவனத்துடன் மக்களுக்கு செய்து சொல்ல வேண்டியது அரசின் கடமை.

திசை திருப்பும் தமிழக அரசின் செய்தி : 

இந்நிலையில், "நிலக்கரி சுரங்க பட்டியலில் இருந்து தமிழ்நாடு பெயர் நீக்கம்" எனும் செய்தியை தமிழ்நாடு அரசும் சில ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. 

இது முழுக்க முழுக்க ஒரு திசை திருப்பும் செய்தி என்று, பசுமைத் தாயகம் மாநிலச் செயலாளர் இர. அருள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், 

தமிழ்நாட்டின் புதிய சுரங்க திட்டங்கள் கைவிடப்படவில்லை! எவரும் ஏலம் எடுக்க முன்வராத திட்டங்கள் தான் கைவிடப்பட்டுள்ளன!

"நிலக்கரி சுரங்க பட்டியலில் இருந்து தமிழ்நாடு பெயர் நீக்கம்" எனும் செய்தியை தமிழ்நாடு அரசும் சில ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. இது ஒரு திசை திருப்பும் செய்தி ஆகும்.

விற்காத திட்டத்தை வாபஸ் பெற்றது சாதனையா?

இந்தியாவின் நிலக்கரி சுரங்கங்களை வணிக ரீதியில் தனியாருக்கு ஏலம் விடும் திட்டத்தின் கீழ் 2021ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு முறையும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களை தனியார் சுரங்க ஏலத்துக்கு அறிவித்து வருகிறது மத்திய அரசு. இதுவரை 7 முறை ஏலம் நடந்தும் வெறும் 29 சுரங்கங்கள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் சேத்தியாத்தோப்பு, வடசேரி, மைக்கேல்பட்டி ஆகிய இடங்கள் முறையே 30.03.2022, 03.12.2022, 29.03.2023 ஆகிய மூன்று முறை மத்திய அரசால் ஏலத்திற்கு விடப்பட்டன.

ஆனால், ஒருமுறைக் கூட ஒருவரும் இவற்றை ஏலத்தில் எடுக்க முன்வரவே இல்லை. இப்படி சீண்டுவார் எவருமில்லாத திட்டங்கள்தான் மத்திய அரசின் ஏலப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டை அழிக்க காத்திருக்கும் நிலக்கரி பேராபத்து!

எதிர்காலத்தில் புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்படாத பகுதியாக தமிழ்நாட்டை மத்திய மாநில அரசுகள் அறிவிக்கவில்லை. மாறாக, புதிய நிலக்கரி சுரங்கங்களை வலுக்கட்டாயமாக திணிக்கும் முயற்சியில்தான் மாநில திமுக அரசு உள்ளது.

திணிப்பு 1:

கடலூர் மாவட்டத்தின் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் சுமார் 1300 ஏக்கரில் என்.எல்.சி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் எடுக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

திணிப்பு 2:

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தில் இடம்பெற்றுள்ள 9 கிராமங்களையும் உள்ளடக்கி, கடலூர் மாவட்டத்தின் 47 கிராமங்களின் 12,125 ஏக்கரில் மூன்றாவது புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்கப்போவதாக 21.07.2022 அன்று என்.எல்.சி அறிவித்துள்ளது. இதற்காக ரூ. 3,756 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திணிப்பு 3:

சுமார் 45,000 ஏக்கரில் வீராணம் நிலக்கரி திட்டம் & பாளையம்கோட்டை நிலக்கரி திட்டம் ஆகியவற்றை அமைப்பது தொடர்பான ஆய்வுகளை மத்திய அரசின் MECL நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

மேற்கண்ட நிலக்கரி திட்டங்கள் எதையும் மத்திய அரசோ, மாநில அரசோ கைவிடவில்லை. இந்த திட்டங்களை அனுமத்திக்க மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை.

ஆகமொத்தம், NLC சுரங்க விரிவாக்கம், NLC 3ஆவது புதிய சுரங்கம், வீராணம் நிலக்கரி திட்டம்  கைவிடப்படவில்லை. எனவே, "நிலக்கரி சுரங்க பட்டியலில் இருந்து தமிழ்நாடு பெயர் நீக்கம்" எனும் செய்தித் தலைப்பு திசை திருப்புவதாக உள்ளது.

குறிப்பு: மத்திய அரசின் ஏலப்பட்டியலில் தமிழ்நாட்டின் சேத்தியாத்தோப்பு, வடசேரி, மைக்கேல்பட்டி திட்டங்கள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்ட பின்னர், அதுவும் வடசேரி பகுதியும் ஏலப்பட்டியலில் உள்ளது என்பதை தெரிவித்த பின்னர்தான் - தமிழக அரசியல் கட்சிகள் தூக்கத்திலிருந்து எழுந்து எதிர்த்தன. அதன் பின்னரே ஏலப்பட்டியலில் இருந்த 3 இடங்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NLC Issue TNGovt Announce News Fact Check


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->