பாஜக-விற்கு ₹6,654 கோடி நன்கொடை; 68% அதிரடி உயர்வு! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு தேர்தல் நிதிப் பத்திர முறையை ரத்து செய்த பிறகு, பாஜக-வின் நிதி வசூல் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல் 1 - மார்ச் 30) பாஜக ₹6,654 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 68% அதிகம்.

நிதி ஆதாரங்கள்:
பாஜக-விற்கு கிடைத்த மொத்த நிதியில் பெரும்பகுதி அறக்கட்டளைகள் மற்றும் பெருநிறுவனங்கள் மூலம் கிடைத்துள்ளது:

தேர்தல் அறக்கட்டளைகள்: ₹3,744 கோடி. இதில் 'புரூடென்ட் அறக்கட்டளை' மட்டும் ₹2,180 கோடி வழங்கியுள்ளது.

பெருநிறுவனங்கள்: சீரம் இன்ஸ்டிடியூட் (₹100 கோடி), ரங்டாசன்ஸ் (₹95 கோடி), வேதாந்தா (₹67 கோடி), பஜாஜ் குழுமம் (₹66 கோடி) மற்றும் ஐ.டி.சி (₹35 கோடி) ஆகியவை முன்னணிப் பங்களிப்பாளர்கள்.

தனிநபர்கள்: ₹20,000-க்கு மேல் காசோலை மற்றும் வங்கிப் பரிமாற்றம் மூலம் நிதி வழங்கியுள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் நிலை:
பாஜக-வுடன் ஒப்பிடுகையில் மற்ற பிரதான கட்சிகளின் நிதி வசூல் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது:

பாஜக    ₹6,654   -  68% உயர்வு
காங்கிரஸ்    ₹522.13   - 43% சரிவு
திரிணாமுல்    ₹184.08    - பெரும் சரிவு
பி.ஆர்.எஸ்    ₹15.09   - கடும் வீழ்ச்சி
காங்கிரஸை விட பாஜக 12.5 மடங்கு அதிக நிதி பெற்றுள்ளது.

குறிப்பாக, எதிர்க்கட்சிக் கூட்டணியில் உள்ள 12 கட்சிகளின் மொத்த நிதியை (₹1,343 கோடி) சேர்த்தால் கூட, அது பாஜக-வின் நிதியை விட 4.5 மடங்கு குறைவாகவே உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

election Donation BJP TMC INC report submission 


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->