கடலுக்கடியில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம்; சீன புவியியலாளர்கள் கண்டுபிடிப்பு..!
A massive gold mine has been discovered under the sea in China
சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள லாய்சூ கடற்கரைக்கு அருகே, மிகப்பெரிய தங்கச் சுரங்கத்தை சீன புவியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஒரு கண்டுபிடிப்பால், லாய்சூ நகரத்தின் மொத்த தங்க இருப்பு 3,900 டன்னாக உயர்ந்துள்ளது.
சீனாவின் ஒட்டுமொத்த தங்க இருப்பில் 26% இந்த ஒரே நகரத்தில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது 01 டன் தாதுவில் சராசரியாக 4.2 கிராம் தங்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கடலுக்கடியில் உள்ள தங்கப் படிமத்தின் உண்மையான அளவை அதிகாரிகள் வெளியிடவில்லை.
இந்த கண்டுப் பிடிப்பால் சீனாவின் தங்க இருப்புக்கள் முன்பு மதிப்பிடப்பட்டதை விட கணிசமாக அதிகமாக இருக்கலாம் என்று உணர்த்துகிறது. அதேநேரத்தில், இந்தத் தங்கத்தை எடுக்க சீனா சுமார் 11,000 கோடி ரூபாய் (1.4 பில்லியன் டாலர்) முதலீடு செய்து அதிநவீன சுரங்க வசதியை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், இந்த ஆலை பயன்பாட்டிற்கு வரும்போது, நாளொன்றுக்கு 12,000 டன் தாதுக்கள் சுத்திகரிக்கப்பட்டு, ஆண்டுக்கு 15 டன் தங்கம் சீனாவிற்கு லாபமாகக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

கடந்த மாதம், சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியாவோனிங்கில், குறைந்த தர தங்கப் படிமத்தைக் கண்டுபிடித்ததாக அந்த நாடு அறிவித்தது. 1949-இல் மக்களாட்சி நிறுவப்பட்டதற்குப் பிறகு, கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய ஒற்றைத் தங்கப் படிமமாக இது அறியப்பட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஷான்டாங் மாகாணம், சீனாவின் தங்க இருப்புகளில் சுமார் கால் பகுதியை அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், லைஜோ அமைந்துள்ள ஜியாவோடாங் தீபகற்பத்தில் உள்ள 3,500 டன்களுக்கும் அதிகமான (123.46 மில்லியன் அவுன்ஸ்) தங்கமும் அடங்கும். இது உலகின் மூன்றாவது பெரிய தங்கச் சுரங்கப் பகுதியாகும்.

சீனா தங்கத் தாது உற்பத்தியில் உலகின் மிகப்பெரிய நாடாக உள்ளது. அதன்படி, சீனா தங்கச் சங்கத்தின்படி, கடந்த ஆண்டு இதன் உற்பத்தி 377 டன்களாக (13.3 மில்லியன் அவுன்ஸ்) இருந்தது. தற்போது தங்க உற்பத்தியில் முதலிடத்தில் இருந்தாலும், நிரூபிக்கப்பட்ட தங்க இருப்புகளில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்குப் பின்தங்கியுள்ளது.
இதற்கு முன்னதாக, இந்தியாவில் கர்நாடகாவின் கொப்பல் மாவட்டம் அம்ராப்பூரில் வளமான தங்கம் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
A massive gold mine has been discovered under the sea in China