நாளை முதல் பயிருக்கான இழப்பீடு வழங்கப்படும்.!! என்எல்சி நிர்வாகம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிக்கான நிலம் கையாகபடுத்தும் போது விளைநிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுரங்கத்திற்கு கால்வாய் வெட்டும் பணியில் சேதப்படுத்தியது விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

என்எல்சி நிர்வாகத்தின் இத்தகைய அராஜப் போக்கு இருக்கு பொதுமக்களும், விவசாயிகளும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

ஏற்கனவே ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இருப்பீடு தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சேதமடைந்த பயிருக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த இழப்பீடு தொகையை வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் அது தொடர்பான அறிக்கையை ஆகஸ்ட் 7ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.  

நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் நாளை முதல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இழப்பீட்டுத் தொகை 30 ஆயிரம் பெற்று விவசாயிகளுக்கு மீதமுள்ள பத்து ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை சிறப்பு துணை ஆட்சியரை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என என்எல்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NLC announced Crop compensation given from tomorrow


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->