வங்கியில் பிராந்திய மொழி தவிர்ப்பா?.. திருச்சி சிவா ட்விட்டிற்கு, நிர்மலா சீதாராமன் பதில்..!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் பல நடவடிக்கைகள் தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைகிறது. தமிழகத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தும் பல விஷயங்களுக்கு தமிழர்களும் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். மொழி கற்றுக்கொண்டால் அது பல விஷயங்களை அறிந்துகொள்ள உதவும் என்றாலும், அதனை விருப்பத்திற்கு மாறாக திணிப்பதென்பது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 

திமுக எம்.பி கனிமொழி இந்தி மொழி தெரியாததற்கு அவமானப்பட்டதாகவும், இதனைப்போன்ற சம்பவம் இயக்குனர் வெற்றிமாறனிற்கு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி, இணையத்தில் பெரும் கேள்வியை எழுப்பியது. இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா " நான் தமிழ் பேசும் இந்தியன் " என்ற டி-சர்ட்டை அணிந்து பிரச்சனையை துவங்கி வைத்தார். 

இதனையடுத்து இணையத்தில் இந்த விஷயம் பெரும் வைரலான நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மத்திய அரசிற்கு எதிரான கண்டன குரல்கள் அடுத்தடுத்து பதிவாகி வந்தது. இந்த சமயத்தில், திமுக எம்.பி திருச்சி சிவா புதிய குற்றசாட்டை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். 

இது தொடர்பான ட்விட்டில், " வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் இயந்திரங்களில் பிராந்திய மொழிகளை அகற்றும் முடிவிற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறோம். இந்த நிலையை சரிசெய்ய வற்புறுத்துகிறோம் என்று தெரிவித்தார். தற்போது, இந்த ட்விட்டிற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். 

இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் பதிவு செய்துள்ள ட்விட்டில், " மத்திய அரசு சார்பாக வங்கிகளில் அல்லது ஏ.டி.எம் மையங்களில் பிராந்திய மொழிகள் உபயோகம் செய்வதை தடுத்து நிறுத்துமாறு எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதுபோன்ற எண்ணமும் மத்திய அரசுக்கு இல்லை " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NIRMALA SITARAMAN ANSWER TO TRICHY SIVA TWIT


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->