யார் அந்த ஆதிலிங்கம்.? வசமாக சிக்கிய நடிகை வரலட்சுமி! போதைப் பொருள் கடத்தல் வழக்கில் NIA சம்மன்! - Seithipunal
Seithipunal


போதை பொருள், ஆயுதம் கடத்திய வழக்கில் நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமிக்கு தேசிய புலனாய்வு முகமை சம்மன் அனுப்பியுள்ளது விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் வெலிங்டன் கடற்கரை பகுதியில் 300 கிலோ ஹெராயின் போதை பொருள் மற்றும் ஏகே-47 துப்பாக்கிகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் தற்போது வரை 13 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அதில் 10 பேர் இலங்கை தமிழர்கள் ஆவர். இவர்களிடம் போதைப் பொருள் மற்றும் ஏகே-47 துப்பாக்கிகள் எவ்வாறு கடத்தப்படுகிறது என்பது குறித்து விசாரணை மேற்கொண்ட போது பாகிஸ்தான் இருக்கும் நபர் மூலமாக கடத்தப்படுவது தெரியவந்தது.

கடல் வழியாக இந்தியாவில் அமைந்துள்ள துறைமுகங்கள் மூலம் கடத்தல் நடைபெறுவது தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் 13 பேரிடம் விசாரணை நடத்தி ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் 14வது நபராக ஆதிலிங்கம் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

இவர் நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமியின் உதவியாளராக இருந்ததும் தெரியவந்தது. மேலும் சினிமா துறையில் பைனான்ஸ் தொழிலையும் நடத்தி வந்துள்ளார். போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து சினிமா பைனான்சியர்களுக்கு உதவியதும் என்.ஐ.ஏ விசாரணையில் தெரியவந்தது.

திரைப்படம் எடுக்க மிகப்பெரிய செட்டுகள் அமைப்பதற்கு படத்தின் தயாரிப்பாளர்கள் இவரிடம் பல கோடி ரூபாய் கடன் பெற்றதும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் குணசேகரன் என்பவர் தலைவராக செயல்படும் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா என்ற அரசியல் அமைப்பில் தேசிய துணைத் தலைவராக ஆதிலிங்கம் இருந்ததும் என்.ஐ.ஏ விசாரணையில் தெரிய வந்தது.

இந்த அரசியல் அமைப்பை சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதற்காக உருவாக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைவராக செயல்பட்ட குணசேகரன் ஏற்கனவே போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆதிலிங்கம் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியதில் நடிகை வரலட்சுமிக்கு உதவியாளராக இருந்தது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை நடிகை வரலட்சுமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. போதைப் பொருள் கடத்தல் பற்றியும், எதன் அடிப்படையில் அவர் உதவியாளராக பணியமர்த்தப்பட்டார் என்ற கோணத்திலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடிகை வரலட்சுமி இடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை வரலட்சுமி தற்போது ஆந்திராவில் படப்பிடிப்பில் இருப்பதால் நேரில் ஆஜராக கால அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆதிலிங்கம் வரலட்சுமி உதவியாளராக அதிகாரப்பூர்வமாக இருந்ததால் அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதால் அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்த களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை வரலட்சுமி போதை பொருள் கடத்தல் வழக்கில் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ள சம்பவம் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NIA summons actress Varalakshmi in drug smuggling case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->