சென்னையை உலுக்கிய பெட்ரோல் குண்டு வீச்சு.! காவலரிடம் NIA தீவிர விசாரணை.!! - Seithipunal
Seithipunal


கடந்த அக்டோபர் 25ஆம் தேதி பிற்பகல் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் முதல் நுழைவாயில் முன்பு கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் பாட்டில் உடன் வந்து அதனை பற்ற வைத்து கேட் அருகே வீசினார்.

இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்ததோடு கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது வெடிபொருள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த சென்னை மாநகர போலீசார் புழல் சிறையில் அவரை அடைத்தனர்.

மேலும் கருக்கா வினோத் மீது பல குற்ற வழக்குகள் நிலுவைல் உள்ளதால் அவர் மீது கடந்த நவம்பர் 11ஆம் தேதி குண்டர் சட்டம் பாய்ந்தது. மேலும் ஆளுநர் மாளிகை மீது கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக தமிழக காவல்துறை விளக்கம் அளித்திருந்தது. இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்பு கருக்கா வினோத் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்துள்ளார்.

இதனால் ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேற்ற சிறையில் திட்டமிடப்பட்டதா? என்ற கோணத்தில் தமிழக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் இந்த வழக்கானது தேசிய புலனாய்வு அமைப்பான NIA ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து புதிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த தேசிய புலனாய்வு அமைப்பு தனது விசாரணையை தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இன்று சம்பவம் நடைபெற்ற இடத்தை தடயவியல் நிபுணர்களுடன் NIA அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர். 

மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தமிழக ஆயுதப்படை போலீசாரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் முடிவில் ஆளுநர் மாளிகை முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தமிழக ஆயுதப்படை காவலர் சில்வாணுவை NIA அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் கொண்டு வீச்சு சம்பவத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரை NIA அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NIA investigates TNpolice regarding petrol bomb attack on Governor House


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->