கல்லூரிகளில் அடுத்தாண்டு முதல் புதிய பாடத்திட்டம் - அமைச்சர் பொன்முடி தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழங்களின் கீழ் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளில் உள்ள பட்ட படிப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடம் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதற்காக அடுத்தாண்டு முதல் பாடத்திட்டம் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

இந்த பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக, நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில், தமிழ்நாடு உயர்கல்வி மன்ற அலுவலகத்தில் ஆலோசனைக்கு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், வேலை செய்பவர்களாக மட்டும் இல்லாமல் வேலை வழங்குபவர்களாகவும் இருக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், இந்த வருடம் மாணவர்கள் சேர்க்கையில் கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட முதன்மை பாட வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் இந்த பாடங்களில் கணினி அறிவியல் பாடத்தையும் இணைத்து நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று ஒவ்வொரு பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டு, அதற்கு பதிலாக புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கைகளும் வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை துணைவேந்தர்கள் பரவியிட்டு பின்னர் வழங்கப்படும்.

இதனால், அடுத்த ஆண்டில் இருந்து தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். ஆனால் செமஸ்டர் தேர்வுகளில் தமிழ், ஆங்கிலம் பாடம் மட்டும் அனைவருக்கும் பொதுவானதாக அமையும்.

அரசு உதவி பெரும் கல்லூரிகளில் பணி நியமனங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்கு பணி நியமன சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். அதுமட்டுமல்லாமல், கல்லூரிகளில் ஆராய்ச்சிகளுக்காக ஏற்கனவே ரூ. 50 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. 

இதேபோல் ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் சமூக முன்னேற்றத்துக்காக பாடுபட்ட தலைவர்கள் பெயரில் அறக்கட்டளை திறக்கப்படும். இந்த அறக்கட்டளையில் சம்பந்தப்பட்ட தலைவர்களின் பெயரில் டிப்ளமோ படிப்புகளையும் நடத்தலாம்" என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

next year new syllabus in arts and science colleges higher educational minister speach


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->