இடையார்பாளையம் பகுதியில் புதிய மின்மாற்றி..சபாநாயகர் தொடங்கி வைத்தார்!
New transformer in Idayarpalayam The Speaker inaugurated
புதுவை இடையார்பாளையம் பகுதியில் 220 kv மின்மாற்றியை சபாநாயகர் செல்வம் இயக்கி தொடங்கி வைத்தார்.
மணவெளி சட்டமன்றத் தொகுதி இடையார்பாளையம் பகுதியில் ரூ.21.00 லட்சம் மதிப்பில் 220 kv திறன் கொண்ட புதிய மின்மாற்றியை சட்டப்பேரவைத் தலைவர் திரு செல்வம் ஆர் அவர்கள் இயக்கி வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
மணவெளி சட்டமன்றத் தொகுதி இடையார்பாளையம் பகுதியில் நிலவி வந்த குறைந்த மின்னழுத்தத்தை நிவர்த்தி செய்யும் வகையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவைத் தலைவருமான திரு செல்வம்.ஆர் அவர்கள் நடவடிக்கை எடுத்து புதுச்சேரி அரசு மின்துறை மூலம் ரூபாய் 21 லட்சம் மதிப்பில் 220 KV புதிய மின்மாற்றி அமைக்க அரசாணை பெற்று தந்தார்.
அதன்படி புதுச்சேரி அரசு மின் துறை தவளக்குப்பம் (O&M) மூலம் இடையார்பாளையம் பகுதியில் ரூபாய் 21.00 லட்சம் மதிப்பில் 220 KV திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான திரு செல்வம் ஆர் அவர்கள் கலந்து கொண்டு மின்மாற்றியை இயக்கி வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மின்துறை செயற்பொறியாளர் கிருஷ்ணசாமி உதவி பொறியாளர் சக்திவேல் இளநிலைப் பொறியாளர் திருமுருகன் இடையார்பாளையம் ஊர் பஞ்சாயத்தார் முக்கிய பிரமுகர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
English Summary
New transformer in Idayarpalayam The Speaker inaugurated