நீட் தேர்வு ரத்து செய்யப்படாததால் தொடரும் மாணவர்களின் தற்கொலை! அமைச்சர் உதயநிதி வெளியிட்ட தகவல் ! - Seithipunal
Seithipunal


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வு ரத்து செய்யப்படாததால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்று தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் எம்.எல்.ஏ எழிலரசன் ஏற்பாட்டில் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, உத்தரமேரூர் எம்.எல்.ஏ தலைமையில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. 

இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு ஆட்டோ ஓட்டுனருக்கு சீருடை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினார். 

இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற 52 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். 

பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ''நீட் தேர்வு ரத்து செய்வோம் என தேர்தலின் போது வாக்குறுதி அளித்து இருந்தோம். 

மத்திய அரசு அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் 21 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இருமுறை சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தும் அந்த மசோதாவில் ஆளுநர் கையெழுத்திடவில்லை. 

இதனால் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEET exam not cancelled Students committed suicide


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->