நீட் தேர்வில் தோல்வி..  மகனை தொடர்ந்து தந்தையும் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளில் சேருவதற்காக அகில இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய தகுதி தேர்வான நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

இதனால் ஏழை, கிராமப்புற மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவு பாதிக்கப்படுவதாக பலர் கூறி வருகின்றனர். அதன் காரணமாக இந்த தேர்வை ரத்து செய்ய அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்த சென்னையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து 2 முறை தோல்வி அடைந்தால் மனமுடைந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் மகன் உயிரிழந்த துக்கத்தில் இருந்த ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகர் நேற்று நாளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வால் மகன் தந்தை அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEET Exam failed son and father suicide in Chennai


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->