தென்காசி : தந்தையை கொன்ற நபரை கத்தியால் குத்திய சிறுவன் கைது.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர் ஐயப்பன். அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை என்பர் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றியத்தின் பாஜக கூட்டுறவு பிரிவின் தலைவராக இருந்து வந்தார்.

இவருக்கும், அய்யப்பனுக்கும் ஏற்கனவே பணம் பிரச்சனைத் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்தநிலையில், நேற்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், கோபமடைந்த செல்லத்துரை ஐயப்பனை கத்தியால் குத்தினார். 

இந்த கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த ஐயப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஐயப்பனின் மகன் தனது தந்தையை கொன்ற ஆத்திரத்தில் செல்லத்துரை கையில் வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவரை சரமாரியாக குத்தியுள்ளார். 

இதனால், செல்லத்துரையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து, போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். அதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர்,நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near thenkaasi school student arrested for man kill


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->