கடலூர் || பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிக்கு தாலிகட்டிய மாணவன்.! வலைதளத்தில் வைரலாகும் வீடியோ..! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்வதற்காக சிற்றுந்து பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. 

அங்குள்ள நிழற்குடையில் பள்ளி சீறுடையில் இருந்த மாணவி ஒருவருக்கு மாணவர் ஒருவன் மஞ்சள் கயிறு மூலம் தாலி கட்டியுள்ளார். இதனை அவருடன் இருந்த மாணவன் ஒருவன் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில், அந்த மாணவி 12-ம் வகுப்பு படித்து வருவதும், தாலி கட்டிய மாணவன் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்துள்ளது. 

இதுபோன்று தொடர் சம்பவங்கள் நடைபெறுவதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near cudaloore college student married school student in bus stand


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->