விதவைக்கு வாழ்க்கை கொடுத்த வாலிபர்.! இரண்டே மாதத்தில் உயிரிழந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை அடுத்த வடமங்களக்கரை பகுதியை சேர்ந்தவர் ஹேமசுதா. இவரது கணவர் பெருமாள்ராஜ் என்பவர் சமீபத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதன்பிறகு ஹேமசுதாவுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்தனர். 

இந்நிலையில், இவர்களது காதலுக்கு பாலசுப்பிரமணியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததனால் அந்த எதிர்ப்பை மீறி ஹேமசுதாவை, பாலசுப்பிரமணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் பாலசுப்பிரமணி தனது அம்மாவை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றார். ஆனால், அவரது வீட்டில் பாலசுப்பிரமணியின் அண்ணன் பாலமுருகன் இருந்தார். 

அப்போது அவர் பாலசுப்பிரமணியை பார்த்ததும் கோபம் அடைந்து, "எங்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த நீ, இப்போ இங்க ஏன் வந்த? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் இந்த வாக்குவாதம் இருவருக்கும் இடையே மோதலாக மாறியது. இதில் கோபம் அடைந்த பாலமுருகன், கத்தியை எடுத்து தம்பி என்றும் நினைக்காமல், பாலசுப்பிரமணியை குத்தினார். 

இதனால், அவரது தலையில் கத்திக்குத்து ஏற்பட்டது. படுகாயத்துடன் உயிருக்கு போராடிய பாலசுப்பிரமணியை அருகிலிருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமணையில், சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணி நேற்று உயிரிழந்தார். 

இதுகுறித்து பாலசுப்பிரமணியின் மனைவி ஹேமசுதா கொடுத்த புகாரின் பேரில் பாலமுருகன் மீது காரமடை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, அதன் பின்னர் பாலமுருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் பேரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near coimbatore elder brother kill younger brother


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->