கடன் செயலியில் கடன் பெற்ற இளைஞர்.! தொடர்ந்து மிரட்டிய கும்பலால் உயிரிழப்பு..!  - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள கே.கே. நகரைச் சேர்ந்தவர் நரேந்திரன். இவர் சென்னையில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருக்கிறார். இவர், தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டார். 

இதையடுத்து, வெளியே சென்றிருந்த அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டினுள்ளே தனது மகன் நரேந்திரன் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதைக் கண்டு பதறிய அவரது பெற்றோர்கள் உடனடியாக கே.கே. நகர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

அந்த தகவலின் பேரில் வந்த காவல்துறையினர் நரேந்திரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், நரேந்திரன் ஒரு கடன் செயலி மூலம் ரூ. 33,000 கடன் பெற்றுள்ளார். இவர் அந்தப் பணத்தை முழுமையாக திருப்பி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், இவர் கடன் பெற்ற அந்தச் செயலி கும்பல்  இன்னும் பணத்தை செலுத்த வேண்டும் என்று தெரிவித்து அவரை ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளனர்.

இதற்காக அவர், வேறு ஒரு செயலி மூலம் மேலும் ரூ. 50,000 பணத்தை கடனாக பெற்று இந்த செயலியில் கட்டியுள்ளார். இதத் தொடர்ந்தும் அந்தக் கும்பல் நரேந்திரனைத் தொடர்ந்து மிரட்டிவந்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல், அந்தக் கடன் செயலி கும்பல், நரேந்திரன் புகைப்படத்தை தவறாக உருவாக்கி அதை அவரது தோழிகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai young man died for get loan


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->