ஆன்லைன் ரம்மி விளையாட பணம் திருடிய மகன்.! மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட தாய்.! - Seithipunal
Seithipunal


சென்னையிலுள்ள வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் பகுதியை சேர்ந்தவர்கள் கண்ணன்-செல்வி தம்பதியினர். இவர்களின் மகன் தேவேந்திரன் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 

இந்த நிலையில், தேவேந்திரன் கொஞ்ச கொஞ்சமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி, பேராசையில் தான் பணிபுரிந்து வரும் கம்பெனியில் ரூ,3 லட்சத்தை திருடியும் விளையாடி உள்ளார். 

அதிலும் தோல்வியை சந்தித்ததால், அச்சமடைந்த தேவேந்திரன் வீட்டில் யாரிடம் சொல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து, தேவேந்திரன் திருடிய பணத்தை திருப்பி செலுத்தாததால் கம்பெனி நிர்வாகம் சார்பில் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் அளித்துள்ளனர். 

அந்த புகாரின் படி, போலீசார் விசாரணை செய்ததில், தேவேந்திரனின் பெற்றோர் பணத்தை விரைவில் ஒப்படைத்து விடுவதாக உத்தரவாதம் அளித்துள்ளனர். இந்த நிலையில், தேவேந்திரன் தலைமறைவாகி விட்டதால் பெற்றோர் பணத்தை கட்டமுடியாமல் தவித்து வந்துள்ளனர். 

இதனால், மனமுடைந்த தேவேந்திரனின் தாயார் செல்வி நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார். அவருடைய, அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பார்த்த போது, செல்வி தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai woman sucide for son play online rummy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->