செங்கல்பட்டு : அரசு பேருந்தின் மீது மோதிய வேன் - 7 பேர் படுகாயம்.!  - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து இரவு 11½ மணியளவில் செங்கல்பட்டு அடுத்த பழவேலி என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த வேன் ஒன்று அரசு பேருந்தின் பின்பக்கத்தில் மோதியது. 

இதனால், வேன் பலத்த சேதமடைந்ததனால், அதில் பயணம் செய்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாலதி, முருகன், கஸ்தூரி, கோபிநாத், ஹரிஷ், மதன்ராஜ், இந்திரா உள்ளிட்ட ஏழு பேர் காயம் அடைந்தனர். 

உடனே அருகிலிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுபி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் உறவினர்கள் என்பதும், இவர்கள் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது என்பதும் தெரியவந்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near chengalpattu government bus and van accident seven peoples injury


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->