தேசிய கொடி அஞ்சல் நிலையங்களில் விற்பனை! பேரணி மூலம் மக்களிடையே விழிப்புணர்வு! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள அஞ்சல் நிலையங்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தேசியக்கொடி குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பேரணியும் நடைபெற்றது. 

நாட்டின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தங்கள் வீடுகளில் மக்கள் அனைவரும் மூவர்ணக் கொடியை, வருகின்ற 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தேசபக்தியை நாட்டு மக்களிடையே ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் அஞ்சல் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. 

இது 20 இன்ச் அகலம், 30 இன்ச் நீளம் கொண்ட தேசியக்கொடியின் விலை ரூபாய் 25 ஆகும். பொதுமக்கள், சங்கங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு தேசிய கோடி மொத்தமாகவும் சிலரையாகவும் அஞ்சலகங்களில் வாங்கிக் கொள்ளலாம்.

மேலும் இதனை இணையதளம் மூலமாகவும் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மூவர்ண கொடியை இல்லந்தோறும் ஏற்றுவது குறித்து விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மகளிர் பேரணி ஒன்றை சென்னை வடக்கு அஞ்சல் கோட்டம் சார்பில் நேற்று நடைபெற்றது. 

இந்த பேரணியானது அண்ணா நகர் ரவுண்டானாவில் தொடங்கி, அண்ணா நகர் அஞ்சலகம் வரை சென்றடைந்தது. அங்கே தேசிய பெண்கள் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் அனிதா பால்துறையிடம் மூவர்ண தேசியக்கொடி ஒப்படைக்கப்பட்டது.

இந்த பேரணியில் சென்னை வடக்கு முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர், உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

National Flag sales at post offices


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->