காதல் தொல்லை.. பெண் தற்கொலை.. பதற்றம் காரணமாக காவல்துறை குவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாமகிரிப்பேட்டை குச்சிக்காடு அருந்ததியர் தெரு பகுதியை சேர்ந்தவர் அனிதா (வயது 19). இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், இராமலிங்கம் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் வருடம் படித்து வருகிறார். தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், வீட்டில் இருந்தபடியே அனிதா பயின்று வந்துள்ளார். 

படிக்கும் நேரம் போக மீதி நேரம் ஆடு, மாடு மேய்க்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். அங்குள்ள பட்டணம் பகுதியைச் சார்ந்தவன் வல்லரசு. இவன் அனிதாவை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவனின் காதலுக்கு அனிதா மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். இது குறித்து அனிதா வல்லரசை எச்சரித்தும், காதல் தொல்லை கொடுப்பதை நிறுத்தாமல் இருந்துள்ளான். 

இந்நிலையில் வழக்கம்போல செவ்வாய்க்கிழமையன்று அனிதா ஆடு மேய்க்க சென்ற நிலையில், அவரை வழிமறித்த வல்லரசு தன்னை காதலிக்கும்படி மீண்டும் வற்புறுத்தியுள்ளான். கொடூரனை எச்சரித்து மனம் நொந்தபடியே வந்த அனிதா, வீட்டிற்கு சென்றவுடன் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே சென்றிருந்த அனிதாவின் தங்கை வீட்டிற்குள் வருகையில், அக்கா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார். 

இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பார்க்கையில், அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. அனிதா தங்கையின் அழுகுரலைக் கேட்ட வல்லரசு மற்றும் அவனது நண்பர்கள் அனிதாவின் வீட்டிற்குள் சென்ற நிலையில், வல்லரசை கண்டு ஆத்திரமடைந்த அனிதாவின் தங்கை தனது அக்காவிவின் சாவிற்கு வல்லரசு தான் காரணம் என்று கூறி கதறி அழுதார். 

ஊர்மக்கள் மற்றும் அனிதாவின் உறவினர்கள் வல்லரசு மற்றும் அவரது நண்பர்களை பிடித்து அடித்து நொறுக்கிய நிலையில், அங்கிருந்து கோகுல்நாத் என்பவன் தப்பிச் சென்றுள்ளான். தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை காவல் துறையினர், வல்லரசு மற்றும் அவனது நண்பனை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கையில், ஊர் மக்கள் காவல் வாகனத்தை சுற்றிவளைத்து போராட்டம் செய்தனர். இதனால், சுமார் 4 மணி நேரம் காவல் நிலையத்திற்கு கொடூரர்களை அனுப்பி வைக்க முடியாமல் காவல் துறையினர் தவித்துபோகினர். 

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராசிபுரம் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லாததை தொடர்ந்து, ராசிபுரம் வட்டாட்சியர் உத்தரவாதத்தின் பேரில் வல்லரசு மற்றும் அவனது நண்பர்களை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அனிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவிவரும் காரணத்தால் நாமகிரிப்பேட்டையில் அதிரடிப்படை காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal girl Suicide due to Love Torture Police Production Implemented Avoid Violence


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->