'பாசிசப் போக்காலேயே திமுக அழிந்து விடும்'; சவுக்கு சங்கர் கைதுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, 'பாசிசப் போக்காலேயே திமுக அழிந்து விடும்' என்று கடுமையாக சாடியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''கடப்பாறையை வைத்து வீட்டின் கதவை உடைத்து ஊடகவியலாளர் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது.

பெண்களின் பாதுகாப்பை வேட்டையாடிய மனித மிருகங்களும், போதை கடத்தல் மன்னன்களும், சட்டம் ஒழுங்கை சீரழித்து வரும் சமூக விரோதிகளும் தமிழகத்தில் சர்வ சாதாரணமாக உலவி வரும் வேளையில், ஒரு ஊடகவியலாளரை பயங்கரவாதி போல கைது செய்யும் அளவிற்கு அப்படி என்ன அவசியம் நேர்ந்தது?

ஆளும் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் ஊடகவியலாளர்களைக் கைது செய்து முடக்குவதை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தை ஒட்டுமொத்தமாகக் குழி தோண்டிப் புதைக்க நினைக்கும் திமுக அரசு தனது பாசிசப் போக்காலேயே வீழும்.'' என்று நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nainar Nagendran condemns the arrest of Savukku Shankar


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->