கொடூரம்! மூதாட்டியை கொண்டு விட்டு 14 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள்...! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த 78 வயதான அர்ஜூனன் என்பவர் மற்றும் இவரது மனைவி 71 வயதான ருக்மணி.இந்த தம்பதிகளுக்கு பாலசுந்தர், செந்தில் முருகன் என்ற 2 மகன்களும், சண்முக சுந்தரி என்ற மகளும் உள்ளனர். இதில் செந்தில் முருகன் சென்னையிலும், சண்முக சுந்தரி திருநெல்வேலியிலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.மேலும், பாலசுந்தர் காவல்கிணறு இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார்.

இவர் பெற்றோர் வீட்டுக்கு அருகேயுள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இதில் அர்ஜூனன் கடந்த மாதம் இறந்து விட்டதால், ருக்மணி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு பால சுந்தர் தினமும் சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். அவ்வகையில், இன்று காலை சாப்பாடு கொடுப்பதற்காக பாலசுந்தர் சென்றபோது வெளிக்கதவு பூட்டிக்கிடந்தது. உடனே பாலசுந்தர் பலமுறை தனது தாயை அழைத்தும் அவர் வரவில்லை.

இதனால் வீட்டின் பின்புறம் சென்றபோது அங்கு பின்கதவு திறந்து கிடந்தது.பின்வாசல் அருகே ருக்மணி தலையில் ரத்தக் காயத்துடன் இறந்து கிடந்தார். அவர் கழுத்தில் 7 பவுன் செயின் மற்றும் கையில் அணிந்திருந்த 7 பவுன் எடை கொண்ட வளையல்கள் என 14 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த பாலசுந்தர் வள்ளியூர் காவலருக்கு தகவல் தெரிவித்தார்.

இதில் சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.மேலும், ருக்மணி தனியாக இருப்பதை அறிந்து மர்மநபர்கள் அவரை அடித்துக்கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என காவலர்கள் கருதுகின்றனர்.

இதில் ருக்மணி அணிந்திருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி அப்படியே இருந்தது. எனவே மர்மநபர்கள் கழுத்து, கையிலிருந்த நகைகளை பறித்தபோது ருக்மணி தடுத்திருக்கலாம் என்றும், அப்போது கொள்ளையர்கள் ருக்மணியை தள்ளி விட்டு நகையை பறித்துக் கொண்டு ஓடியிருக்கலாம் என்றும் காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.

மேலும் வீட்டிலிருந்த பீரோ திறந்து கிடந்தது. ஆனால் அதில் லாக்கர் இருந்ததால் அதற்குள் வைக்கப்பட்டிருந்த நகை தப்பியுள்ளது.இந்த சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை சேகரித்து காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mysterious men took away 14 pounds of jewelry from an old woman


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->