டெல்டாவில் "நிலக்கரி சுரங்கம்" பணிக்கு அனுமதி இல்லை.. எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உறுதி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள வடசேரி, மகாதேவபட்டினம், உள்ளிக்கோட்டை, குப்பச்சிக்கோட்டை, பரமன்கோட்டை, கீழ்குறிச்சி, பரவத்தூர், கொடியாளம், அண்டமி, நெம்மேரி உள்ளிட்ட இடங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கான ஆய்வினை மேற்கொள்ள ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு ஒப்பந்த புளியை மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பட்ட பொதுமக்களும், டெல்டா விவசாயிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த விவகாரம் குறித்து இன்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் "டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பாக மக்கள் வீதி அடைய வேண்டாம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்த திட்டமும் செயல்படுத்த கூடாது என்ற சட்டம் உள்ளது.

எனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வேளாண் சார்ந்த பணிகள் தான் மேற்கொள்ளப்படும். வேறு எந்த பணிகளும் மேற்கொள்ளப்படாது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். எனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சுரங்கம் போன்ற பணிகளை தொடங்க அனுமதி இல்லை" என விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MRK Panneerselvam confirms no permission for coal mining in Delta


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->