கடலூர் || மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து - ஓட்டல் ஊழியர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஓட்டல் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் ஆதிவரகநந்தம் பகுதியை சேர்ந்தவர் ரவி (54). இவர் சிதம்பரத்தில் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக சிதம்பரத்தில் இருந்து பேருந்தில் புவனகிரிக்கு சென்றார்.

பின்பு புவனகிரி பேருந்து நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ரவி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக ரவி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ரவியை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ரவி உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த புவனகிரி போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Motorcycle car accident in Cuddalore


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->