புதரில் குழந்தையின் அழுகுரல்.. பதறிய தாயுள்ளம் கொண்ட மனம்.. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பெண்மணி.! - Seithipunal
Seithipunal


புதரில் கிடந்த பச்சிளம் குழந்தையை மீட்டு, பெண்மணி தாய்ப்பால் கொடுத்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழக்கொத்த தெரு பகுதியை சார்ந்தவர் ரம்யா. இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், இந்த பகுதிக்கு அருகே முட்புதர் நிறைந்த காடு உள்ளது. 

இன்று முட்புதர் பகுதியில் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்க்கையில், பிறந்து சிலமணிநேரமே ஆன பச்சிளம் குழந்தை இருந்துள்ளது. 

அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு அமைதியாக நின்ற நிலையில், தாயுள்ளம் கொண்ட ரம்யா குழந்தையை மீட்டு, குளிக்க வைத்துள்ளார். முட்கள் குத்தி வலியால் துடித்த குழந்தை, பசியாலும் மேலும் அழுதுள்ளது.

இதனையடுத்து ரம்யா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததை தொடர்ந்து, குழந்தை அழுகையை நிறுத்தியுள்ளது. இதன்பின்னர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். உள்ளூர் மக்களிடம் விஷயத்தை கேட்டறிந்து, குழந்தையை விட்டு சென்றது யார்? என்பது தொடர்பான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், தாயுள்ளத்துடன் குழந்தையை அரவணைத்து, பசியாற்றி பார்த்துகொண்டு ரம்யாவிற்கு காவல் துறை அதிகாரிகள் நன்றி தெரிவித்து, குழந்தையை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mothers Love is a Best in World Thiruvarur women Ramya gives Breast Milk for Unknown Baby


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal