சிறு வணிகர்களுக்கு குட் நியூஸ்!! நிலுவை வரி மொத்தமா தள்ளுபடி!! முதல்வரின் அசத்தல் அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தில் இன்று உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 110 விதியின் கீழ் சிறு வணிகர்களுக்கு நிலுவை வரி தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார். ரூ.50,000 கீழ் வரி நிலுவை வைத்துள்ள சிறு வணிகர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும் ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரை வரி நிலுவை வைத்துள்ள வணிகர்கள் 20% வரியை செலுத்தினால் மட்டுமே போதும் எனவும் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் இந்த அறிவிப்பால் தமிழகம் முழுவதும் சுமார் 95,502 வணிகர்கள் பயன் பெறுவார்கள். வணிகர்களுக்கான புதிய வரித்தொகை சமாதான திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றில் முதன்முறையாக வணிகவரித்துறையில் இத்தகைய சலுகை வழங்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin announced tax exemption for small businesses


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->