ஓணம் பண்டிகைக்கு நாங்கள் சிறப்பு அரசு விடுமுறை அளித்தோம் - முக ஸ்டாலின்!  - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஓணம் திருநாள் வாழ்த்து செய்தி!

உற்சாகத்துடனும் மன மகிழ்ச்சியுடனும் 'ஓணம் திருநாள்' கொண்டாடும் கேரள மாநில மக்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான ‘ஓணம் திருநாள்’ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அறுவடைத் திருநாளான 'ஓணம் திருநாள்' கேரள மக்களின் பாரம்பரியப் பண்பாட்டுத் திருவிழா. சாதி மத பேதமின்றி கேரள மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடிடும் இந்த விழா, அனைவரின் வாழ்விலும் எல்லா விதமான இன்பத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் திருவிழா ஆகும்.

ஓணம் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, நாகர்கோவில், கோவை, நீலகிரி, சென்னை ஆகிய பகுதிகளில் வாழும் கேரள மக்களுக்கு 'சிறப்பு அரசு விடுமுறை' அளித்ததை இந்த நேரத்தில் நினைவூட்டி, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் இனிய ‘ஓணம் திருநாள்’ வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin onam wishes


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->