அமைச்சர் வீடு முற்றுகை.. முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கைது!
Ministers house siege Former Tamil Nadu chief minister V Narayanasamy arrested
அமைச்சர் லட்சுமி நாராயணன் வீட்டை முற்றுயிட முயன்ற முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் லஞ்சப் புகாரில் சிறையில் உள்ள நிலையில் அமைச்சர் லட்சுமி நாராயணனை பதவி நீக்கம் செய்யக்கோரி பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திராவிட விடுதலை கழகத்தின் லோகு ஐயப்பன் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் லஞ்சப் புகாரில் சிக்கிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் லட்சுமி நாராயணன் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவியை விலகக்கோரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர் லட்சுமி நாராயணன் வீட்டை முற்றுயிட முயன்றனர்.அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், துணைத் தலைவர் அனந்தராமன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் அமைச்சர் வீட்டை முற்றுகையிட ஊரவலகமாக சென்ற நிலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோரை போலீசார் வலுகட்டாயமாக கைது செய்தனர்.
English Summary
Ministers house siege Former Tamil Nadu chief minister V Narayanasamy arrested